Sunday, August 1, 2010

ஸ்ரீ சர்வ சொரூபிணீ அம்மன்



ஸ்ரீ சர்வ சொரூபிணீ அம்மன்


ஸ்ரீ சர்வ சொரூபிணீ அம்மன் காயத்திரி

சர்வ மங்களாய வித்மகே!

சர்வ துஷ்ட வினாசினி தீமஹீ

தன்னோ சர்வ சொரூபிணீ ப்ரசோதயாத்.



மகிசாசுரனை வதம் செய்து சாந்தமாக தேவர்களுக்கு காட்சி கொடுத்த அம்மனே ஸ்ரீ சர்வ சொரூபிணீ அம்மன்.

சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் , பெரியபாளையம் செல்லும் வழியில் கன்னிகைபேர் என்ற ஊர்.

இந்த ஊரிலிருந்து வேன்கள் செல்லும் வழியில் தூரத்தில் பெருமுடிவாக்கம் என்னும் தெய்வாம்சம் பொருந்திய கிராமத்தில் ஸ்ரீ சர்வ சொருபிணீ அம்மன் ஆலயம்.

கருவறையில் அம்மன் நடந்து வரும் தோற்றத்தில் திரு கரங்களுடன் காட்சி கொடுக்கிறாங்க! கண் கொள்ளா தெய்வ தரிசனம்! இதுவே திவ்ய தரிசனம்.

கருவறைக்கு வெளியில் அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமாய் அனைத்து சக்தியும் ஒன்று சேர்ந்து சிவனின் ஒரு பாதியாக உள்ள ஸ்ரீ சர்வ சொருபிணீ அம்மன் அழகாக தேவர்களுக்கு தரிசனம் எப்படி கொடுத்தார்களோ அந்த தரிசனத்தை நமக்கும் கொடுக்கிறாங்க ஸ்ரீ சர்வ சொரூபிணீ அம்மன்.


குறிப்பு:- செவ்வாய் , வெள்ளி , ஞாயிறு அருள் வாக்கு சொல்லப்படும்.


ஸ்ரீ சர்வ சொருபிணீ ஸ்வாமிகள்
ஸ்ரீ சர்வசொருபிணீ சக்தி மடம்
பெருமுடிவாக்கம் , பூரிவாக்கம் அஞ்சல்
வெங்கல், திருவள்ளூர் மாவட்டம்,
தமிழ்நாடு.


போன் - 044 -24629493
செல்:- 9444864746 . 9445115450
பஸ் ரூட்:-92,123,124,125
இறங்குமிடம்:-கன்னிகை பேர்
பஸ்ரூட்:-T79,58-D, 58E

இறங்குமிடம்:- பெருமுடிவாக்க்கம்




பெருமாளின் தங்கை சக்தியே ஸ்ரீ சர்வ சொரூபிணீ அம்மன் கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

ஓம் சர்வ ஸ்வரூப சர்வேசி!
சர்வ சக்திமன் விதே!
பயேப்பஸ் த்ரோகிணோ தேவி!
துர்கா தேவி நமோஸ்துதே!

ஸ்ரீ சர்வ சொரூபிணீ அம்மனை காண்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியமே காரணம்!

இங்கே அம்மனுக்கு பூசணிக்காய் கூட பலியிடுவது கிடையாது, சைவ உணவே நைவேத்தியமாக கொடுக்கபடுகிறது. (பெருமாளை போலவே)

ஸ்ரீ சர்வ சொரூபிணி அம்மனை சுற்றி இராகு, கேது, அங்காரகன்(செவ்வாய்), முன்று கிரகங்களும் அம்மனை பூஜிக்கும் அற்புத காட்சியாக தரிசனம் தராங்க!

அம்மனின் திரு பாதத்திற்கு கீழே நவகிரகங்கள் சூரியன் , சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகிய நவகிரகங்கள் அம்மனின் படிகளாக அமைக்கபட்டுள்ளது மேலும் ஒரு சிறப்பு!

அம்மனின் அருகில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயமும், ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சர்வ சொரூபிணீ அம்மனுக்கு பெரிய திருமுடி இருப்பதால் பெருமுடிவாக்கம் என்று இந்த ஊருக்கு பெயர் வந்தது.

மாதந்தோறும் பௌர்ணமி இரவு ஜோதி தரிசனம் செய்யபடுகிறது.

பௌர்ணமி இரவு முதல் அம்மனுக்கும் சுவாமிக்கும் மகா யாக ஹோமமும் அதனை தொடர்ந்து மகா அபிசேகமும் , மஹா ஜோதி தரிசனமும் , அன்னதானமும் மிக சிறப்பாக நடை பெறுகிறது.

மஹா ஜோதி அடி உயத்தில் உள்ள ஜோதித் தூணில் மீது உள்ள அகாண்டத்தில் ஏற்றபடுகிறது.

அஞ்ஞானமும் என்கிற மன இருளை நீக்கி
மெய்ஞானமும் என்கிற ஒளியை காட்டவே!

இந்த ஜோதி தரிசனம் நடை பெறுகிறது.

திருநாகேஸ்வரம், ஸ்ரீ காலஹஸ்தி போலவே இராகு, கேது தோஷ நிவார்த்தியும், அங்காரக தோஷ நிவர்த்தியும் முறையாக ஆகம விதிப்படி நடைபெறுகிறது.

இராகுவாலோ, கேதுவாலோ அல்லது அங்காரகன் எனும் செவ்வாயாலோ தோஷம் ஏற்பட்டு திருமண தடை, காரிய தடை, முன்னேற்றமின்மை , வியாபாரத்தில் மந்தம் அல்லது முடக்கம் போன்றவைகளால் பாதிக்கபட்டோருக்கு மிக சிறந்த தோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலமே ஸ்ரீ சர்வ சொருபீணி ஆலயம்!

இத்திருக்கோவில் தவத்திரு ஸ்ரீ சர்வ சொரூபிணீ ஸ்வாமிகள் மிக சிறப்பாக பராமரித்து வருகிறார்.

இத்திருக்கோவில் ஸ்ரீ சர்வ சொரூபிணீ சுவாமி அவர்களால் பிரதி ஞாயிறு ,செவ்வாய் ஆகிய கிழமைகளில் அருள்வாக்கு காலை மணி முதல் சொல்லபடுகிறது.








ஸ்ரீ